"இந்த நடிகரை தான் காதலிக்கிறேன்..." - உறுதி செய்த தமன்னா

"இந்த நடிகரை தான் காதலிக்கிறேன்..." - உறுதி செய்த தமன்னா
Published on

நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் டேட்டிங் செல்கிறார் என சமீப காலமாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில், ஒரு பேட்டியில் தனது காதல் பற்றி மனம் திறந்துள்ளார் தமன்னா. லஸ்ட் ஸ்டோரீஸ் 2-வில் நடிக்கும் போது விஜய் வர்மாவுடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியதை பற்றி கூறிய தமன்னா, விஜய் வர்மாவை பற்றி நினைத்தாலே மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார். விஜய் வர்மா மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும், தன்னுடைய உலகத்தில் மிக அழகாக அவர் பொருந்தியுள்ளார் என்றும் கூறியுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த புதிய ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com