“ரூ.30,000 கட்டி ப்ளைட்ல கூட வந்துட்டேன் சார்.. ஆனா எங்கூருக்கு போக பஸ் இல்ல“ - கோயம்பேட்டில் கதறும் பயணிகள்

x

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், நள்ளிரவில் திடீரென பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை என்று கூறி ஆத்திரமடைந்த பயணிகள், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகளை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பான சூழல் நிலவியது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போகச் செய்தனர். இதனிடையே பேருந்துகள் வருகை குறைவாக இருந்ததால், கிடைக்கின்ற பேருந்துகளில் பயணிகள் நின்றுக் கொண்டு பயணிக்கும் நிலை ஏற்பட்டது. கோடை விடுமுறை காலங்களில் நள்ளிரவு நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்