"அடி வாங்கியதை ரசித்துப் பார்த்தேன்.." - ஆஸ்கர் மேடையில் அறை வாங்கியதை பற்றி மனம் திறந்தார் க்றிஸ் ராக்

x

கடந்த முறை நடந்த ஆஸ்கார் விருது வழங்கும் விழாவின் போது, தன் மனைவியை உருவ கேலி செய்யும் வகையில் பேசிய க்றிஸ் ராக்கை வில் ஸ்மித் மேடையேறி கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது... நீண்ட காலத்திற்குப் பிறகு நேரலையில் நெட்ஃப்ளிக்ஸ் நிகழ்ச்சிக்காக வந்த க்றிஸ் ராக், அந்த சலசலப்பான நிகழ்வை நினைவுகூர்ந்தார்... அப்போது, தன்னை அடித்த வில் ஸ்மித் எமான்சிபேஷன் திரைப்படத்தில் அடி வாங்குவதைப் பார்ப்பதற்காகவே அப்படத்தை ரசித்து ரசித்துப் பார்த்ததாக க்றிஸ் ராக் நகைச்சுவையாகப் பேசினார்... மேலும், வில் ஸ்மித் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தின் திருமணம் தாண்டிய உறவை விமர்சித்த அவர், "வில் ஸ்மித் என்னைக் காயப்படுத்தியதை விட, பிங்கெட் ஸ்மித் வில் ஸ்மித்தை அதிகம் காயப்படுத்தியதாக" மேடையிலேயே விமர்சனம் செய்தார்...


Next Story

மேலும் செய்திகள்