'ஆத்தா வந்துருக்கேன் டா'அதிகாரிகளை தெறிக்க விட்ட திடீர் சாமிகள்

x

தேனி அருகே ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டுள்ள கோவிலை இடிக்கச் சென்றபோது பெண்கள் சாமியாடியதால், கோயிலை இடிக்காமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். அன்னஞ்சி கிராமத்தில் ஓடைப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அந்த கோயிலை இடிப்பதற்கு ஜேசிபி இயந்திரத்துடன் அதிகாரிகள் சென்றனர். இதையறிந்த பெண்கள் உள்ளிட்ட கிராமத்தினர் கோயிலின் முன்பு திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது சில பெண்கள் சாமியாடியதால், கோயில் இடிக்கும் பணியை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்