கணவர் செய்த 2-ஆவது திருமணம்...பொங்கி எழுந்த மனைவி செய்த காரியம்..திருச்சியில் பரபரப்பு

x

முசிறி அருகே தும்பலம் பெருமாள்பாளையம் கிராமத்தை சேர்ந்த கலையரசி என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜசேகரன் என்பவருக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமான சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், ராஜசேகர் மனைவி கலையரசிக்கு தெரியாமல், கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறொரு பெண்ணை திருமணம் செய்த கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கலையரசி, முசிறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால், அதிருப்தி அடைந்த கலையரசி, காவல்நிலையம் முன்பு அமர்ந்து கணவன் ராஜசேகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி, அவரை சமாதானப்படுத்தி அனுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்