குழந்தை இல்லாத விரக்தி...கணவன் மனைவி எடுத்த முடிவு - அக்கம்பக்கத்தினரால் வெளிவந்த உண்மை

x

சென்னை புளியந்தோப்பில், வீட்டில் தற்கொலை செய்து கொண்ட கணவன், மனைவியின் உடலை, அழுகிய நிலையில் போலீசார் மீட்டனர்.

சென்னை புளியந்தோப்பு சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் - துலுக்காணம் தம்பதிக்கு, திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகியும், குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட விரக்தியில், தம்பதி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல், சக்திவேலின் வீடு உள்பக்கமாக கதவு மூடப்பட்ட நிலையில், துர்நாற்றம் வீசியுள்ளது. அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர் அழுகிய நிலையில் இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்