மனைவியை நடுரோட்டில் கத்திரிக்கோலால் குத்தி கொன்ற கணவன்.. வேடிக்கை பார்த்து சென்ற வாகன ஓட்டிகள்

x

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடியாத்தம், மேல்பட்டியை அடுத்த அழிஞ்சிகுப்பத்தை சேர்ந்த ஜெய்ஷங்கர், தனது மனைவி புனிதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, சண்டையிட்டு வந்த‌தாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆம்பூரில் உள்ள தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று விட்டு புனிதா வீடு திரும்பிய போது, அவரை வழி மறித்த ஜெய்சங்கர், கத்திரிக் கோலால் சரமாரியாக குத்தினார்.

மயங்கி விழுந்த புனிதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, புனிதா இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இதையடுத்து, ஜெய்சங்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்