தர்காவில் மனைவியை கொன்ற கணவன் - நெல்லையில் அதிர்ச்சி

x

நெல்லையில் தர்காவில் வைத்து மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த தம்பதி இம்ரான் கான் - சஜிதா பேகம். இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சஜிதா தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மனைவியை சமாதானப்படுத்தி இம்ரான் கான் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். செல்லும் வழியில் குளத்தங்கரை தர்காவில் இருவரும் பிரார்த்தனை செய்துள்ளனர். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி சஜிதாவை சரமாரியாக தாக்கிவிட்டு இம்ரான்கான் தப்பித்து சென்றுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சஜிதா உயிரிழந்த நிலையில், தப்பியோடிய இம்ரான்கானை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்