“ஒடிசா ரயில் விபத்தில் கணவர் பலி.!“.. இழப்பீடு தொகை கோரிய பெண் - ஒடிசா தலைமை செயலாளர் எச்சரிக்கை

x

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகையை பெற சிலர் மோசடியில் ஈடுபட ஆரம்பித்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

கட்டாக் மாவட்டத்தில் உள்ள மணிபண்டாவை சேர்ந்த கீதாஞ்சலி தத்தா என்பவர், ரயில் விபத்தில் தமது கணவர் பிஜய் தத்தா என்பவர் இறந்து விட்டதாகவும், உடலை அடையாளம் காட்டுவதாகவும் கூறியிருந்தார். ஆனால், ஆவணங்களை சரிப்பார்த்ததில், பொய்யான கோரிக்கை என்பது தெரிய வந்தது. இதனிடையே கணவர் பிஜய் தத்தா, மணியபந்த காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து பிரச்சனை தொடங்கியது. இருவரும் கடந்த 13 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாவும் எனவே பொது பணத்தை அபகரிக்க முயன்றதாக

போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. பிரச்சனை பெரிதான நிலையில், கீதாஞ்சலி தலைமறைவாகி விட்டார். இதனிடையே து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் தலைமைச் செயலாளர் பிகே ஜெனா, உடல்கள் மீது போலி உரிமை கோருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்