மனைவி தலையில் கல்லை தூக்கி போட்டு கொன்ற கணவன்

x

திண்டுக்கல் அருகே மனைவி தலையில் கல்லை தூக்கி போட்டு கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருமூர்த்தி என்கிற துரை. இவரது மனைவி மாலதி. துரை அடிக்கடி குடித்து விட்டு வந்து தனது மனைவியுடன் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் ஏற்பட்ட குடும்ப தகராறில், துரை தனது மனைவியின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துவிட்டு, தனது இரண்டு குழந்தைகளுடன் தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் துரையை தேடிய நிலையில், அவரை கைது செய்து குழந்தைகளை மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்