தொடர்ந்து காப்பகத்திலிருந்து மாயமாகும் சிறுமிகள்..! கேரள அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

x

கேரளாவில் சிறுமிகள் காணாமல்போனது தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் அருகே மங்கனத்தில், காப்பகம் ஒன்றில் இருந்து ஒரு சிறுமி காணாமல்போய்விட்டாள். கோட்டயத்தில் அண்மைக்காலமாக மூன்றாவது முறையாக இப்படியான சம்பவம் நடந்துள்ளது என்பதால், மனித உரிமை ஆணையம் சுயவழக்காகப் பதிந்து விசாரணையைத் தொடங்கியது. மகிளா சமக்யா எனும் அரசுசாரா அமைப்பால் நடத்தப்படும் இந்தக் காப்பகத்தில், கண்காணிப்பும் மேற்பார்வையும் சரிவர இல்லை என்றும், தங்கியிருக்கும் குழந்தைகள் மகிழ்ச்சியாக இல்லை என்றும் ஊடகச் செய்திகளைச் சுட்டிக்காட்டி, ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது. மனிதாபிமான விரோதமான செயல்களுக்கும், காப்பகவாசிகள் கண்ணியமில்லாமல் நடத்தப்படவும் முகாந்திரம் உண்டு என்றும், காப்பகத்திலிருந்து வெளியேறும்படி அவர்கள் நிர்பந்தம் செய்யப்படுகிறார்கள் என்றும் மனிதவுரிமை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து,கேரள மாநில தலைமைச்செயலாளர் இரு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்கவேண்டும் என்றும், குழந்தைகள் கடத்தல் தொடர்பாக டிஜிபியும் அறிக்கை அளிக்கவேண்டும் என்றும் மனிதவுரிமை ஆணையம் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்