'ஹியூமன் கால்குலேட்டர்' - கணக்கு போடுவதில் கால்குலேட்டரை விஞ்சிய பழனி சிறுவன் | dindigul

x

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த 8 வயது சிறுவன் ஹியூமன் கால்குலேட்டர் எனும் சான்று பெற்று சாதனை படைத்துள்ளான். பழனியில் மூன்றாம் வகுப்பு படித்து வருபவர் சிறுவன் அபினவ். இவர், கால்குலேட்டரை பயன்படுத்தி விடை தெரிந்து கொள்ள வேண்டியவற்றை, கால்குலேட்டருக்கு இணையான வேகத்தில் கூறி அசத்தி வருகிறார். இவரது இத்திறமையை பாராட்டி இந்தியாஸ் வேர்ல்ட் ரெக்கார்ட், ஹியூமன் கால்குலேட்டர் என சான்று வழங்கி பாராட்டியுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது கணித திறமையை வெளிப்படுத்தி, பாராட்டு பெற வேண்டும் என்பது தனது ஆசை என சிறுவன் அபிநவ் தெரிவித்துள்ளான்.


Next Story

மேலும் செய்திகள்