அமோகமாக கோவில்பட்டியில் நடைபெறும் கழுதை பால் விற்பனை.. ஒரு லிட்டர் பால் இவ்ளோவா!..

x

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கழுதை பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியில், விருத்தச்சலம் பகுதியை சேர்ந்த நடேசன் என்பவரது தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் 10 கழுதைகளை வைத்து கழுதை பால் விற்பனை செய்து வருகின்றனர். கழுதை பாலில் மருத்துவக்குணம் இருப்பதாக கூறி, தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆர்வமாக வாங்கி கொடுக்கின்றனர். ஒரு சங்கு கழுதை பால் 70 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பால் 5000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்