மளிகை கடைக்கு வந்த பெரிய லிஸ்ட் - டோர் டெலிவரி செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

மளிகை கடைக்கு வந்த பெரிய லிஸ்ட் - டோர் டெலிவரி செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இதே போன்ற ஒரு சம்பவம்தான் சென்னை சாலிகிராமத்தில் அரங்கேறியிருக்கிறது.

இங்குள்ள சுவாமிநாதன் என்பவரின் கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர், 6ஆயிரத்து 350 ரூபாய்க்கு அரிசி உட்பட மளிகை பொருட்கள் வேண்டுமென ஒரு பெரிய லிஸ்ட் கொடுத்துள்ளார்.

அந்த பொருட்களை வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு கூறிய அவர், தன்னிடம் 2 ஆயிரம் ரூபாய் பண நோட்டுகளாக 10 ஆயிரம் ரூபாய் இருப்பதாகவும் வீட்டுக்கு வந்தால் அதைத் தருவதாகவும் மீதப்பணம் தனக்கு சில்லறையாக வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

அதை நம்பி கடையில் பணிபுரிபவரிடம் 3,695 ரூபாய் மீதி பணத்தை கொடுத்து அனுப்பியிருக்கிறார் சுவாமிநாதன்.

ஆனால் அங்கே வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த மர்ம நபர், மீதப் பணத்தை வாங்கிக் கொண்டு பணத்தை எடுத்து வருவதாக வீட்டின் மாடிக்கு போயிருக்கிறார்.

பின்னர் அவர் திரும்பவே இல்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த உரிமையாளர் போலீசில் புகாரளித்திருக்கிறார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தில்லாலங்கடி வேலை செய்த அந்த ஆசாமியை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்