சிக்கனமாக வாழ்வது எப்படி?-தாய்லாந்து இளைஞரின் டிக்டாக் வீடியோ

x

சிக்கனமாக வாழ்வது எப்படி?-தாய்லாந்து இளைஞரின் டிக்டாக் வீடியோ

சிக்கனமாக வாழ்வது எப்படி என்று டிக் டாக் வீடியோ வெளியிடும் தாய்லாந்து இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன...

அதிகரித்து வரும் விலைவாசியில் மாதத்திற்கு 10 ஆயிரத்திற்கும் குறைவாக மளிகை சாமான்கள் வாங்குவது சாத்தியமா என்ன?...

எவ்வளவு சம்பாரித்தாலும் ஒரு கடைக்குள் ஏறி இறங்கி விட்டால் கனமான பர்சும் லேசாகி, லேசாக இருந்த மனது கனமாகி விடும்...

ஆனால் திருப்தியாக வாழ10 ஆயிரம் என்ன... 8 ஆயிரத்து 800 ரூபாயே போதும் என்கிறார் தாய்லாந்து இளைஞர் பட்டரதேஜ்...

கடைகளுக்கு சென்று தான் வாங்கும் பொருட்களின் விலையுடன் சேர்த்து பார்வையாளர்களுக்கு காண்பித்து ஒவ்வொரு மாதமும் என்னென்ன வாங்கி எப்படி உபயோகித்தால் சிக்கனமாக வாழலாம் என்று வீடியோ வெளியிடுகிறார் பட்டரதேஜ்...

எண்ணி எண்ணி செலவு செய்து நிம்மதியாக வாழும் இந்த பட்ஜெட் பத்மநாபனை லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்