பாஜகவை வெல்வது எப்படி?- காங்., திமுகவின் வைத்த கோரிக்கை - ஒத்திவைக்கப்பட்ட எதிர்க்கட்சிகள் கூட்டம்

x

பீகாரில் ஜூன் 12ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், ஜூன் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வெல்வது தொடர்பாக, ஜூன் 12ஆம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்ப்ட்டிருந்த‌து. இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி ஜூன் 15 ஆம் தேதி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவ காரணங்களுக்காக சோனியா காந்தியும், அவருடன் பிரியங்கா காந்தியும் வெளி நாட்டிற்கு சென்றிருப்பதால், 12 ஆம் தேதி இவர்கள் பங்கேற்க முடியாத சூழல் இருந்துள்ளது. இதே போன்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜூன் 12ஆம் தேதி ஏராளமான அரசு நிகழ்ச்சிகள் இருப்பதால், ஆலோசனைக் கூட்டத்தை தள்ளி வைக்க கோரிக்கை விடுத்த‌தாக கூறப்படுகிறது. இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் திமுகவின் கோரிக்கையை ஏற்று, ஜூன் 24 ஆம் தேதி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்