ஸ்னேக் டே கொண்டாடுவது எப்படி? ஸ்னேக் டே உருவான வரலாறு...

x

அட டேய்ல இன்னைக்கு நாம பாக்க போற டே… என்னனு பாத்தோம்ன… பாம்பென்றால் படையே நடுங்கும்னு சொல்லுவாங்க… அப்டி பட்ட பாம்புக்காகவே ஒரு டேயய தான் இன்னைக்கு நாம பாக்க போறோம்…

அதாவது வர சனிக்கிழமை 16 ஆம் தேதி உலக மக்க எல்லாரும் World Snake Day… கொண்டாடுறாங்கப்பா… அதுனால பாம்புகளை பத்தியும், இந்த பயங்கரமான டேவ எப்படி கொண்டாடலாம் அப்படிங்கிறத பத்தியும் பல சுவாரஸ்யமான விசயங்களையும் தெரிஞ்சுக்கலாம் வாங்க….

அட இருங்கப்பா பாம்ப வெளிய எடுக்குறதுனா சும்மாவா… அதுலாம் தனி கலை… அதுக்குலாம் எங்க சூப்பர் ஸ்டார் தான் வரனும்… ஆறு படையப்பா ரொம்ப நேரம் எடுத்துக்காம சீக்கிரம் பாம்ப வெளிய எடுப்பா…

சரி… சரி… உடனே யூடர்ன் போட்டு படையப்பா மூடுக்கு போயிடாதீங்க... Snake Dayக்கு வாங்க…

பாம்புனா கடிக்கும்… கொத்தும்…. விஷம்னு… பயங்கர டேஞ்சர் ஃபெலோவா இருக்குற இவனுக்குலாம் ஒரு டேயானு…. நம்மள்ள ஒரு சிலர் யோசிச்சுட்டு இருப்பீங்க…. அதனால இந்த டேய் ஏன் உருவாச்சு எப்டி உருவாச்சுங்குற… STD ய முதல்ல பாக்கலாம் வாங்க…

பாம்புகள்லாம், நம்ம கிட்ட இன்னைக்கு நேத்து வந்த ஆன்ராய்டு போன் கிடையாதுங்க… இதுங்கலாம் நம்ம மூதாதையர் காலத்துல இருந்தே பாரம்பரியமா இருந்து வருதுனு ஒரு ஆய்வு தகவல் சொல்லுது… இது மட்டுமில்லாம பாம்புகள்… மக்களோட கலாச்சாரம் , ஆன்மீகம் , மருத்துவம் , விவசாயம்னு பல விசயங்கள்ல மக்களோட ஒன்றி போறதுனால… பிரிக்க முடியாத நண்பனாவும் இருக்கான் இந்த பாம்பு…

மேலும் இயற்கையோட சம நிலைய உருவாக்குற ஒரு உற்பத்தி காரனியாவும் பாம்பு இருக்குறதுனால… மகத்துவமான இந்த பாம்புக்கு ஏன் ஒரு நாள் கொண்டாடலாமேனு உருவானது தான்… இந்த World Snake Day….

சரி வரலாரையே பேசிகிட்டு இருந்தா… ஸ்கூல் மூடுக்கு போயிடுவோம்… அதுனால பாம்ப பத்தின சுவாரஸ்யமான விசயத்துக்குள்ள போகலாம் வாங்க… சுவாரஸ்யமான விசயம்னு சொன்னதும்… இது அட்டாக் பன்ற பாம்பு.. இது அட்டகாசமான பாம்பு… இது விசித்திர பாம்பு… இது கொடூற பாம்புனு மக்களை பயமுடுத்துற மாதிரி கொஞ்சம் ஜாலியான விசயங்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க…

பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்...

உலக மக்கள் தொகைய கணக்கெடுத்து பாக்குற மாதிரி… உலகத்துல எத்தனை வகையான பாம்புகள் இருக்குனு கணக்கெடுத்து பாத்ததுல மொத்தம் 3700 வகை இருக்குறதை கண்டுபிடிச்சிருக்காங்க… அதுல 600 வகையான பாம்புகள் விஷத்தன்மை உடையவையா இருக்கு. இந்த 600ல ஒரு 200 வைகையான பாம்புகள் மனிதர்களையே கொள்ள கூடிய அளவுக்கு கொடூரமான விஷம் கொண்டவையா இருக்காம்…

உலகத்துலயே பாம்புகள் அதிகம் இருக்குற நாடுகள் எதுனு பாத்தா, அதுல ஆஸ்த்ரேலியா தான் முதல் இடம் வகிக்குது… ஏனா மேல சொன்ன 3700 பாம்பு வகைல… சுமார் 1500 பாம்பு வகைகள் ஆஸ்த்ரேலியாவுல ஆனந்தமா வாழ்ந்துகிட்டு இருக்காம்.

அதிகமா பொய் புரளிகளை தாங்கி பாவப்பட்ட ஜென்மா இருக்குறது யாருனு பாத்தா இந்த பாவப்பட்ட பாம்புகள் தானாம்… ஏனா நம்ம கிட்டயே பாம்புகள் பத்தின ஒரு பத்து மூட நம்பிக்கையாவது இருக்கும். எக்ஸ்ஸாம்பிலுக்கு… பாம்பு பழி வாங்கும், பீப்பி ஊதுனா வீட்டு குள்ள பாம்பு வரும், பால் குடிக்கும், பாம்பு தூங்கவே தூங்காது இப்படி அடுக்கிகிட்டே போகலாம் … ஆனா உண்மை என்னனு விசாரிச்சப்போ தான் தெரிய வந்துச்சு, பாம்பு நம்மள விட நல்லா தூங்கும்னு… அதோட இமை கண்ணாடி மாதிரி இருக்குறதுனால நமக்கு தூங்காத மாதிரி இருக்குனு சொல்றாங்க ஆய்வாளர்கள்… அதுனால பப்ளுவ ரொம்ப திட்டாதிங்கப்பா.

பாரம்பரியம் வாய்ந்த நாடுகள்லாம் பாம்புகளை முக்கிய கடவுளா வழிபட்டு வராங்க... அந்த வரிசைல இந்தியா, சீனா, கம்போடியா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகள்லாம் பாம்புக்கு முக்கியதுவம் குடுக்குறதுல முன்னோடியா திகழ்றாங்க…

சினிமாக்களில் படம் எடுத்த பாம்புகள்...

நம்மள்ல பலருக்கு பாம்புனா பயம் தான்… ஆனா அந்த பாம்பையே நாம சாமியா பாக்க ஆரம்பிச்சதுக்கு 80ஸ் 90ஸ்ல வந்த சாமி படங்களும் ஒரு காரணம்னு சொல்லலாம்… சாமி இருக்கோ இல்லையோ ஆனா கண்டிப்பா பாம்பு இருக்கும்… லெட்டர் குடுக்குறது , பூ குடுக்குறதுனு , பால் எடுத்துட்டு வரதுனு ஏகப்பட்ட ஆக்டிங்க குடுத்து மக்கள் மத்தில அப்பவே பல அப்லாஸ்களை அள்ளிருச்சுனா பாருங்களேன்…

விஷப்பாம்பில் பாரம்பரிய மதுபானம்...

பாம்ப பொறியல் பன்னியும் அவிச்சும் சாப்பிடுறத நிறைய நாட்டுகாரங்க பன்றாங்க ஓகே… ஆனா 23 ஆம் புலி கேசி படத்துல அக்கா மாலா கப்சிய தயாரிக்கும் போது… பாம்பு சட்டையால அதை வடிகட்டி எடுப்பாங்க… படத்துல நாம இதை காமெடியா பாத்து சிரிச்சுட்டோம் ஆனா… உண்மையாவே சீனா , தாய்லாந்து , வியட்னாம் போன்ற நாடுகள்ல பாம்ப ஒயின்ல பல நாள் ஊற வச்சு… ஸ்னேக் ஒயின்னு சொல்லி வித்துகிட்டு இருக்காங்க …

உலகத்துலயே மிகப்பெரிய பாம்பு எதுனு பாத்தா… Reticulated python ன்னு சொல்றாங்க… அதாவது ராஜ மலை பாம்பாம்… அடேங்கப்பா பயங்கர விச பாம்பா இருக்குமோனு பயப்படாதீங்க…. சந்திரமுகில எதுக்கு இருக்கோம்னு தெரியாம தன்டமா 30 வருசமா ஒரு பாம்பு இருக்குமே… அந்த மாதிரி பாம்பு தான்… இவனும்…. இவனுக்கு பசிச்சா போதும் கோழி , ஆடு , நாய்னு எது சிக்குனாலும் ஒரே அமுக்கா அமுக்கிடுவானாம்…. மனுசங்களுக்கு பெருசா ஆபத்து விளைவிக்காதனால சிலர் இந்த பாம்ப்ப செல்ல பிராணியாவும் வளக்குறாங்களாம்…

பளபளப்பன மேனியை கொண்ட அழகான பாம்பு...

பாம்பு ஆபத்தானவனா இருந்தாலும்… அதுலயும் அழகான பாம்பு அப்டிங்குற பட்டத்தை san francisco பகுதில வசிக்க கூடிய garter snake க்கு குடுக்குறாங்கப்பா… ஏனா இதோட உடம்புல ஐந்து வகையான கலர் இருக்குறதாலேயும் … அதோட தோற்றம் பாக்குறவங்க வசீகரிக்குறதுனாலயும்… நான் தான் இந்த உலகத்துல அழகான பாம்பு அப்டிங்குற பட்டத்தை கொத்தி தூக்கிட்டு போயிடுச்சு….

பிரச்சனை வந்தா மனுசங்க மட்டும் தான் நடிப்பாங்கனு நினைக்காதீங்க…. சில நேரம் பாம்புங்க கூட ஆக்ட் பன்னும்மாம்…. அப்டி ஒரு பாம்பு செத்து போற மாதிரி ஆக்ட் பன்ன வீடியோ தான் சில நாட்களுக்கு முன்னாடி… இனையத்துல செம்ம வைரலா பரவுச்சு…

மாலைக்குப் பதில் பாம்பை மாற்றி திருமணம்...

பொதுவா கல்யாணம்னா… மாப்பிள்ளையும் பொன்னும் மாலை மாத்தி கேள்வி பட்டுருப்போம்… ஆனா மாலைக்கு பதிலா பாம்பையே மாலையா மாத்தி பாத்துருக்கீங்களா… இப்போ பாருங்க…

பாம்புகளை பத்தி மத்த சுவாரஸ்யமான விசயங்களை பாத்துட்டு இருக்கும் போது… அதிகமா கலாய்க்கப்பட்ட பாம்புகள் அப்டினு ஒரு வீடியோ என்னோட கண்ணுல தெரியாம மாட்டிகிச்சு… அட அது வேற யாரும் இல்லை நம்ம பங்களாதேஸ் பாம்புங்க தான்…

ஓ… ஒ…. ஒ… ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா அப்டினு கை தூக்கி பாம்பு டான்ஸ் ஆடுறத நாம பாத்துருப்போம்… ஆன அந்த பாம்பு டான்ஸ்ஸ செலப்ரேட் மொமன்ட்டா எடுத்து கிட்டு… கிரிக்கெட் குள்ள கொண்டு வந்தாங்க இந்த பங்களாதேஸ் பிளேயர்ஸ்… விக்கட் எடுத்தா பாம்பு டான்ஸ்… சிக்ஸ் அடிச்சா பாம்பு டான்ஸ்… ஜெயிச்சா பாம்பு டான்ஸ்னு ஓவரா கொண்டாடி தீத்தாங்க… கடைசியா த்ரில்லிங்கான பைனல் மேட்ச்சுல… இந்தியாவா இல்ல பங்களாதேஷாங்குற சூழ்நிலைல… அந்த பாம்புகளை சிக்ஸ் அடிச்சு தும்சம் பன்னிடுவாரு… நம்ம தினேஷ் கார்த்திக்…. அதுகப்புறம் கிரவுன்ட்ல இருந்த ஒட்டு மொத்த ஸ்ரீலங்கா மக்களும் பாம்பு டான்ஸ ஆட ஆரம்பிச்சுட்டாங்க…. ஸ்ரீலங்கவோட கிரிக்கெட் வீடியோவுலயே அதிக வீவ்ஸ் அள்ளுன வீடியோவா இது இருக்குனா பாருங்களேன்… அதுகப்புறம் பங்களாதேஸ் பாம்புகளுக்கு.. ஒரே அசிங்கமா போச்சு குமாரு… மொமன்ட்தான்…

கேம்ஸ் மாறினாலும்... எமோஷன்ஸ் மாறாது...

என்ன தான் இன்னைக்கு நீங்க… வித விதமான வீடியோ கேம்ஸ் , மொபைல் கேம்ஸ்னு விளையான்டாலும்… கண்டிப்பா நோக்கியா 1100ல பாம்பு கேம் விளையாடி தான் இன்னைக்கு ஸ்மார்ட் போன்ல கண்ட விளையாடிட்டு இருப்பீங்கனு நெனைக்குறேன்… ஒரு வேலை நீங்க 90ஸ் கிட்ஸ்னா கண்டிப்பா இந்த கேமை விளையாடிருப்பீங்க… இந்த மொபைல் கேமை… நோக்கியா நிறுவனம் 1997ல தான் நோக்கியா 6100 மாடல் போன்ல லான்ஞ் பன்னாங்க… ஆனா இந்த பாம்பு கேமை 1976 ல கிரெம்லின் இன்டராக்டிவ் அப்டிங்குற பிரிட்டிஷ் நிறுவனம் உருவாக்குனாங்களாம்… அதை தான் நோக்கியா நிறுவனம் வாங்கி வெளியிட்டிருக்கு.

அதுகப்புறம் புது புது ஸ்மார்ட் மொபைல்லாம் வர ஆரம்பிக்க நோக்கியாவும் பழசாகிடுச்சு… பாம்பும் பழசாகிடுச்சு… ஆனா நோக்கியாவ கை விட்ட நம்ம மக்கள் பாம்பை கை விடல… அவங்களுக்காக கூகுள் பிளே ஸ்டோர் பழமை மாறதா அதே ஸ்னேக் கேமை வெளியிட மக்கள்லாம் கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க….

சரி சுவாரஸ்யம்குறையாத பாம்புகளை பத்தி பேசுனா எவளோ வேனாம் பேசிகிட்டே இருக்கலாம்…. அதுனால World Snake Day ய எப்டி கொண்டாடலாம் அப்டிங்குறதை பாக்கலாம்…

ஃபேமிலி டே அன்னைக்கு குடும்பத்தோட போட்டோ எடுக்க சொன்னீங்க… சாக்லேட் அன்னைக்கு சாக்லேட் அன்னைக்கு சாக்லேட் சாப்பிட சொன்னீங்க அந்த மாதிரி எதையாச்சும் பன்ன சொல்லிடுவனோனு பயந்திடாதிங்கப்பா…

அதாவது இந்த டே அன்னைக்கு என்ன பன்னனும்னா…

பாம்புகள் பத்தி உங்ககளுக்கு தெரிஞ்ச விசயத்தை மத்தவங்களோட சேர் பன்னிகனுமாம்…


Next Story

மேலும் செய்திகள்