DK சிவக்குமார் எப்படி சமாதானமானார்?.. 'ராஜமாதா' சோனியா காந்தி சொல்லுக்கு கட்டுப்பட்டாரா கர்நாடக கட்டப்பா?

x

கர்நாடகா முதல்வர் பதவியை சித்தராமையாவுக்கு வழங்க டி.கே. சிவகுமார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் முதல்வரை தேர்வு செய்தில் இழுபறி நீடித்தது. எம்.எல்.ஏ.க்கள் கூட்டதை தொடர்ந்து இருவரையும் டெல்லி அழைத்த காங்கிரஸ் தலைமை நீண்ட பேச்சுவார்த்தையை மேற்கொண்டது. மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியை இருவரும் சந்தித்து பேசியதும், 48 மணி நேரங்களில் முடிவு என்றது காங்கிரஸ் தலைமை...

ஆனால் சித்தராமையாவுக்கு பதிலாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்வர் பதவியை வழங்கவும் என டி.கே. சிவகுமார் பரிந்துரைத்ததாக வெளியான தகவல் பிரச்சினைக்கு முடிவு ஏற்படவில்லையா? என்ற கேள்வியை எழுப்பியது. இதனை தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் தலைமை மரத்தான் பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறது. விடிய விடிய டி.கே. சிவகுமார், சித்தராமையாவிடம் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிற தலைவர்கள் பேசியிருக்கிறார்கள்.

பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்க சோனியா காந்தியும் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக டி.கே. சிவகுமாரிடம் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே சித்தராமையா முதல்வராகிறார், டி.கே. சிவகுமார் துணை முதல்வராகிறார் என்ற தகவலும் நள்ளிரவில் வெளியாகியது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி அறிவித்தப்படி அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில் டெல்லியில் எடுக்கப்பட்ட முடிவு எம்.எல்.ஏ.க்களிடம் தெரிவிக்கப்பட்டு, இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தெரிகிறது. இதற்கிடையே முதல்வர் பதவி விவகாரத்தில் 50-50 பார்முலா இறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

அதாவது இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என பேசப்படுகிறது. இந்த சூழலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வீட்டுக்கு வந்தடி.கே. சிவகுமார், தான் துணை முதல்வர் என்பதை உறுதி செய்திருக்கிறார். துணை முதல்வர் தொடர்பான கேள்விக்கு கட்சி தலைமை எடுத்த முடிவு என்றவர், கட்சியின் நலன் கருதி ஏன் இருக்கக்கூடாது என பதில் கேள்வியுடன் புன்னகைத்து சென்றார். தொடர்ச்சியாக 20-ம் தேதி காங்கிரஸ் அரசு பதவியேற்க உள்ளது


Next Story

மேலும் செய்திகள்