இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது எப்படி?

x

இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி பிறந்த தினம் இன்று

திரைத்துறையில் இயக்குநராகவும், நடிகராகவும் பல ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் தான் சமுத்திரக்கனி..

இன்று 50வது பிறந்தநாளை கொண்டாடும் சமுத்திரக்கனி, சினிமாவில் பாலச்சந்தரின் உதவி இயக்குநராக பயணித்தார். குறிப்பாக பாலச்சந்தரின் 100வது படத்தில் பணிபுரிந்த அவர், பிரபலமான நாடகங்களையும் இயக்கினார்.

உன்னை சரணடைந்தேன் படம் மூலம் சினிமா இயக்குநர் அவதாரம் எடுத்தார் சமுத்திரக்கனி...

அவர் இயக்கிய தரமான படைப்புகளில் முதன்மையானது நாடோடிகள்

போராளி, நிமிர்ந்து நில் போன்ற படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன.

அப்பா படம், விமர்சன ரீதியாக இயக்குநர் சமுத்திரக்கனிக்கு பாராட்டுக்களை பெற்று தந்தன. கடைசியாக இயக்கிய வினோதய சித்தம் படம் தனித்துவமானது...

நிஜத்திலும், திரையிலும் சசிகுமாருடனான அவரது நட்புக்கு இங்கு ஏராளமானோர் ரசிகர்கள்...

இயக்குநர் சமுத்திரக்கனியைவிட இப்போது நடிகர் சமுத்திரக்கனிக்குதான் மவுசு...

சுப்பிரமணியபுரம் படத்தில் அவரது நடிப்பு கவனம் ஈர்க்க, சாட்டை மைல்கல்லாக அமைந்தது.

வேலையில்லா பட்டதாரி படத்தில் தகப்பனாக வாழ்ந்திருப்பார்

சாட்டை படத்தில் பள்ளி வாத்தியாராக மனதை கவர்ந்தவர், அண்மையில் வெளியான வாத்தி படத்தில் வாத்தியாரை மிரட்டும் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்தார்

ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்தவர், டான் படத்தில் அவருக்கு அப்பாவாக கலக்கியிருப்பார்

கதையின் நாயகன், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம், நகைச்சுவை பாத்திரம் என பல கேரக்டர்களில் கலக்கி வருகிறார்...

இயக்குநர், நடிகர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முகத்தன்மை கொண்ட சமுத்திரக்கனி பிறந்த தினம் 1973 ஏப்ரல் 26.


Next Story

மேலும் செய்திகள்