"+2-ல மார்க் கம்மி So.. உனக்கு வீடு தர முடியாது..""மண்டகோளாறு" ஹவுஸ் ஓனரின் விசித்திர ரூல்ஸ்

x

பெங்களூரில் 12 ஆம் வகுப்பில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால், உரிமையாளர் வாடகைக்கு வீடு கொடுக்க மறுத்திருப்பதை யோகேஷ் என்பவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ஆதார் மற்றும் பான் கார்டு போன்ற அடிப்படை விஷயங்களை தாண்டி, வாடகைக்கு வீடு கேட்பவரின் லிங்க்ட்இன், ட்விட்டர் சுயவிவரங்கள், அவர் பணிபுரியும் நிறுவனத்தின் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் மற்றும் 10, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றைப் பகிருமாறு கேட்கப்பட்டுள்ளது. மேலும் அவரைப்பற்றி 200 வார்த்தைகள் அடங்கிய ஒரு குறிப்பையும் எழுந்த சொல்லியுள்ளார் வீட்டு உரிமையாளர். இவை அனைத்தும் இருந்தும் யோகேஷுக்கு வீடு கிடைக்காததற்குக் காரணம், 12ம் வகுப்பில் அவர் 75 சதவீதம் மட்டும் பெற்றது தான்... மேற்படிப்பு மற்றும் வேலைகளுக்கு 90 சதவீத மதிப்பெண்களை எதிர்பார்க்கலாம், ஆனால் வீடு வாடகைக்கு தர இதையெல்லாம் உரிமையாளர் கேட்டிருக்கும் வினோதம் அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்