தொடர் கனமழை எதிரொலி..! இரவோடு இரவாக இடிந்து விழுந்த வீடு - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்

x

போச்சம்பள்ளி அருகே கனமழையால் வீடு இடிந்து விழுந்த விபத்தில், மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த குள்னூர் கிராமத்தில் சங்கர் என்பவர் வாடகை வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு பெய்த கனமழையால் சங்கரின் வீடு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சங்கரின் மகள், மகன் மற்றும் சங்கரின் தாயார் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்