ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது எரிக்கப்பட்ட வீடு...அதிகாரிகள் முன்னிலையில் உயிரிழந்த இரு பெண்கள்..அதிகாரிகள் 39 பேர் மீது வழக்கு

ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது எரிக்கப்பட்ட வீடு...அதிகாரிகள் முன்னிலையில் உயிரிழந்த இரு பெண்கள்..அதிகாரிகள் 39 பேர் மீது வழக்கு
Published on

உத்தரபிரதேசத்தில் தாயும், மகளுடன் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் உட்பட 39 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கான்பூரில் உள்ள மடவுலி கிராமத்தில் ஆக்கிமிப்புகளை அகற்றும் பணி வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்த பிரமிளா தீட்சித் என்ற பெண்ணும், அவரது 21 வயது மகளும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் புகார் அளித்த நிலையில், வருவாய்துறை அதிகாரிகள் உட்பட 39 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

X

Thanthi TV
www.thanthitv.com