சிக்கன் பக்கோடாவின் தரத்தை சோதித்த உணவு அதிகாரியை தாக்கிய ஹோட்டல் ஓனர்

x

ஆரணி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள அசைவ உணவகங்களிலும், சிக்கன் பக்கோடா கடைகளிலும் தரமற்ற உணவு வழங்கபடுவதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து, ஆரணி முள்ளிப்பட்டு பைபாஸ் சாலையில் உள்ள ஒரு சிக்கன் பகோடா கடையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி கைலேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது உணவு மாதிரிகளை பரிசோதனைக்கு அவர் எடுக்க முயன்றபோது, கடையின் உரிமையாளரும் அவருடைய ஆதரவாளர்களும் கைலேஷ் குமாரை திடீரென்று தாக்கினார்கள்.

இதில், நிலைகுலைந்த கைலேஷ்குமார் காயமடைந்தார்.

தகவலறிந்த வந்த ஆரணி டவுன் போலீசார், கைலேஷ் குமாரை மீட்டு, ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கைலேஷ் குமாரை தாக்கிய பகோடா கடையின் உரிமையாளர் தலைமறைவாகி விட்டதால், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்