சூடு பிடிக்கும் கால்பந்து உலகக்கோப்பை...நாக்-அவுட் சுற்றில் இன்று 2 போட்டிகள் - வெற்றி யாருக்கு ?

x

கால்பந்து உலகக்கோப்பை தொடரில் இன்று 2 நாக்-அவுட் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு அல் ஜனோப் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ஜப்பானும், குரோஷியாவும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

லீக் சுற்றில் முன்னணி அணிகளை வீழ்த்திய முனைப்பில், குரோஷியாவை ஜப்பான் இன்று எதிர்கொள்ள உள்ளது.

கடந்த உலகக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை சென்ற குரோஷியா, பலமான அணி என்பதால் இன்றையப் போட்டி ரசிகர்களிடையே, எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு நாக்-அவுட் போட்டியில் முன்னாள் சாம்பியனான பிரேசில், தென் கொரியாவுடன் மோதவுள்ளது.

இந்தப் போட்டியில் பிரேசில் வெல்வதற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கணிக்கப்படும் நிலையில், பிரேசிலுக்கு தென் கொரியா அதிர்ச்சி அளிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்து இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்