மருத்துவமனை வாசலில் ஓட ஓட ரியல் எஸ்டேட் அதிபருக்கு அரிவாள் வெட்டு | tambaram

x

மருத்துவமனை வாசலில் ஓட ஓட ரியல் எஸ்டேட் அதிபருக்கு அரிவாள் வெட்டு

தாம்பரம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரை மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டி விட்டு சென்றது.

இதனை தொடர்ந்து முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், முருகன் சில ரவுடிகள் குறித்து போலீசில் புகார் அளித்ததாகவும், அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, முருகன் மீது ரவுடிகள் தாக்குதலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்