தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து..லாரி மீது சென்னை பஸ் மோதிய பயங்கரம்

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் தனியார் ஆம்னி பேருந்து, லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. சென்னையில் இருந்து கோவைக்குச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து, சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்படாத நிலையில், 10 பயணிகள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com