"அரசு விதிகளை மீறி விட்டனர்.." - உள்துறை அமைச்சர் திடீர் ராஜினாமா - இங்கிலாந்தில் பரபரப்பு

இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் அமைச்சரவையில் இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுவெல்லா பிரேவர்மென் தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்று கொண்ட லிஸ் டிரஸ் அமைச்சரவையில், இந்திய வம்சாவளி பெண்ணான சுவெல்லா பிரேவர்மென் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அரசு விதிகளை மீறி விட்டதாகக் கூறி, தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அங்கு, அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடித்து வரும் சூழலில், அமைச்சரவையில் இருந்து சுவெல்லா பிரேவர்மன் வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com