ஹாக்கி உலகக்கோப்பை தொடர்... நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி - இந்தியாவின் கோப்பைக் கனவு தகர்ந்தது

ஹாக்கி உலகக்கோப்பை தொடர்... நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி - இந்தியாவின் கோப்பைக் கனவு தகர்ந்தது
x


ஹாக்கி உலகக்கோப்பை தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்து இந்தியா வெளியேறியது.

புவனேஷ்வரில் நடைபெற்ற கிராஸ்-ஓவர் போட்டியின் ஆட்ட நேர முடிவில் இந்தியாவும் நியூசிலாந்தும் தலா 3 கோல்கள் அடித்து சமனிலை வகித்தன.

இதனால் பெனால்டி ஷூட் அவுட் பின்பற்றப்பட்டது.

பரபரப்பாக நடைபெற்ற பெனால்டி ஷூட் அவுட்டில் 5க்கு 4 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து த்ரில் வெற்றி பெற்றது.

இதனால் காலிறுதிக்கு முன்னேற முடியாமல் தொடரில் இருந்து இந்தியா வெளியேறியது.

மேலும், இந்த தோல்வியால் இந்தியாவின் கோப்பை வெல்லும் கனவு இம்முறையும் தகர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்