"ரூபாய் நோட்டுகளில் இந்து தெய்வங்கள்"...பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை

x

"ரூபாய் நோட்டுகளில் இந்து தெய்வங்கள்"...பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை | Money

கெஜ்ரிவாலின் இந்த கருத்து தற்போது பேசு பொருளாகி வருகிறது. இது குறித்து அவர் கூறியதாவது, இந்தியாவில் அனைவரும் பணக்காரர்கள் ஆவதற்கு தெய்வங்களின் ஆசி முக்கியம், தொழிலதிபர்கள் தங்கள் அறைகளில் விநாயகர் மற்றும் லக்‌ஷ்மி உருவங்களை வைத்திருப்பார்கள். ஆகையால், நம் இந்திய ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லக்‌ஷ்மி உள்ளிட்ட தெய்வங்களின் படங்களை அச்சிட வேண்டும் என அவர் கூறியுள்ளார். மேலும், தீபாவளியன்று லக்‌ஷ்மி பூஜை செய்து கொண்டிருந்த போது இந்த யோசனை தோன்றியதாக அவர் தெரிவித்தார். இந்தோனிஷியா 85 விழுக்காடு இஸ்லாமியர்களையும், 2 விழுக்காடு இந்துக்கள் மக்கள் தொகையும் கொண்ட நாடு, அவர்களது ரூபாயில் விநாயகர் படம் இருப்பதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கெஜ்ரிவாலின் இந்த வேண்டுகோள் தற்போது பேசு பொருளாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்