அதானி மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

அதானி குழும புகார் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க செபிக்கு, உச்சநீதிமன்றம், 3 மாதம் அவகாசம் அளித்துள்ளது.அதானி குழும புகார் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கையை இந்திய பங்குகள் மற்றும் பரிவா்த்தனை வாரியமான செபி ஆய்வு செய்து, நிலை அறிக்கையை 2 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் 2-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 6 மாதம் அவகாசம் கோரி செபி மனுத்தாக்கல் செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், அதானி குழும புகார் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கையை ஆய்வு செய்து ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு முன் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்