பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பின் 4 ஆவது மாடியில் இருந்து, விமான பணிப்பெண் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x
  • ஹிமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் 28 வயதான அர்ச்சனா திமான். இவர் துபாயில் பிரபல விமான நிறுவனத்தில் ஏர் ஹோஸ்ட்சாக பணிபுரிந்து வந்துள்ளார்.
  • இந்நிலையில், இவருக்கும் கேரளா மாநிலம் காசர்கோடை சேர்ந்த ஆதேஷ் என்பவருக்கும் டேட்டிங் ஆப் மூலம் பழக்கம் உண்டாகி காதல் ஏற்பட்டுள்ளது.
  • இதனிடையே, பெங்களூருவில் பணிபுரிந்து வந்த ஆதேஷை சந்திப்பதற்காக துபாயில் இருந்து வந்த அர்ச்சனா திமான், பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காதலனுடன் தங்கியுள்ளார்.
  • இதில், சம்பவத்தன்று காதலனுடன் திரையரங்குக்கு சென்ற வீடு திரும்பிய அர்ச்சனா, நள்ளிரவில் அடுக்குமாடி குடியிருப்பின் 4 ஆவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இந்த வழக்கை முதலில் தற்கொலை என வழக்குபதிவு செய்த போலீசார், காதலன் ஆதேஷ் மீது பெண்ணின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்காக பதிவுசெய்தனர்.
  • இதையடுத்து, ஆதேஷை கைது செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்