முதல்முறையாக மலைவாழ் பழங்குடியின பெண் கிராம உதவியாளராக தேர்வு

x

முதல்முறையாக மலைவாழ் பழங்குடியினமான காணி சமுதாயத்தை சேர்ந்த பெண் ஒருவர், கிராம நிர்வாக உதிவியாளராக தேர்வாகியுள்ளார்.

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள அகஸ்தியர் காணி குடியிருப்பை சேர்ந்தவர் அகிலா.

இவர் உள்பட அப்பகுதியை சேர்ந்த 3 பேர் கடந்த மாதம் நடைபெற்ற கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பித்த நிலையில், அகிலா எழுத்து மற்றும் நேர்முக தேர்வில் தேர்ச்சிபெற்றார்.

இந்நிலையில், அவருக்கு சேரன்மகாதேவி சப் கலெக்டர் முகமது சபீர் ஆலம், பணி நியமன ஆணையை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்