ஹிஜாப் விவகாரம்..ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் அதிகாரி மீது மை வீச்சு - பரபரப்பு வீடியோ

x

மத்திய பிரதேசம் மாநிலம் தமோ மாவட்ட கல்வி அதிகாரி மீது மை வீசிய சிலர், ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை எழுப்பி சென்றுள்ளனர். இது குறித்து கூறிய மாவட்ட கல்வி அதிகாரி மிஸ்ரா, மை வீசியவர்கள் கங்கா ஜமுனா பள்ளி ஹிஜாப் விவகாரம் குறித்து பேசியதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து தான் விசாரிக்கவில்லை, உயர் அதிகாரிகள் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது கூறினார். தற்போது, மை வீசியவர்கள், பழிவாங்கும் நோக்கில் இதை செய்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்