ஹிஜாப் விவகாரம் - மாஷா அமினி கல்லறை நோக்கி மாபெரும் பேரணி - உச்சகட்ட பதற்றம்

x

ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி கைது செய்யப்பட்ட மாஷா அமினி போலீஸ் காவலில் மர்ம மரணம் அடைந்தார். அவரது இறப்புக்கு நீதி கேட்டு பல வாரங்களாக போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. மாஷா அமினி இறந்து 40 நாட்கள் கடந்த நிலையில், குர்திஸ்தான் மாகாணத்தின் வடமேற்கில் உள்ள சகேஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அவரது கல்லறை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி சென்றனர்... அவரது கல்லறையில் 10 ஆயிரம் பேர் கூடியதாகவும், அங்கு பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இணைய சேவை துண்டிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்