நாக தோஷம் நீங்க வழிபடும் தலம் - வண்டலூர் மேகநாதீஸ்வரர் கோயிலின் சிறப்புகள்

x

பல்லவர்களின் கோட்டைக்குள் அமையப்பெற்றதாகவும் சோழர்களால் கட்டப்பட்டதாகவும் அறியப்படுகிறது இத்தலம்... வருண பகவான் வழிபட்ட தலமாகவும், இந்திரன் சாப விமோசனம் பெற்ற தலமும் இதுவே... இந்திரனை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் கடும் தவமும் யாகமும் புரிய எண்ணினான் இராவணின் மகன் மேகநாதன்... அதனால் ஈசனை நோக்கி தவமிருந்ததோடு, நீண்ட ஆயுள் பெற ஹோ மகம் ருத்ராட்ச கோமதி யாகம் புரிந்தான்... மேகநாதனின் யாகத்தால் ஈசன் அவனுக்கு நீண்ட ஆயுளோடு இந்திரனை வெல்லும் பலத்தையும் கொடுத்ததால் இந்திரனை வென்ற மேகநாதன் இந்திரஜித் என்றழைக்கப்பட்டான்.. ஈசனானவன் மேகநாதீஸ்வரர் எனும் பெயர் பெற்றதாக கூறுகிறது வரலாறு...

மூலவர் மேகாம்பிகை சமேத மேகநாதீஸ்வரராக மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார்.. மேற்கு நோக்கிய தரிசனம் கிடைப்பது ஆயிரம் கிழக்கு முக தரிசனத்திற்கு சமம் என்று சொல்வதுண்டு... தாயார் மரகதாம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகிறார். மேலும் வாசுகி பாம்பின் மீது சிவபெருமான் நர்த்தனமாடும் திருக்கோலத்தை இக்கோயிலில் நம்மால் தரிசிக்க இயலும்... ஈசன் வாசுகியை கழுத்தில் சுற்றிக் கொண்டு நாகாபரணராகத் திருக்காட்சி அளிப்பதை தரிசிப்பது எங்கும் இல்லா தனிச்சிறப்பு...

இறைவனுக்கு தயிர் அபிஷேகம் செய்வதால் குழந்தை பாக்கியமும், தேன் அபிஷேகம் செய்வதால் கல்வியில் சிறந்து விளங்கவும் அருள் கிடைக்கும்.. அரிசி மாவு வைத்து பூஜை செய்வதால் கடன் தொல்லை அகலும்.. நெல்லி முள்ளி பொடி வைத்து பூஜை செய்வதால் மனக் குழப்பங்கள் நீங்கும், கரும்புச்சாறு பூஜை செய்வதால் பதவி உயர்வு பெறும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை... ஆயுளை நீடிக்கும் சக்தி வாய்ந்த ஆயுஷ்ய மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமமும், சதாபிஷேகமும், திருமணத் தடை நீங்க பார்வதி ஹோமமும் நடைபெறுகிறது...

கோயிலானது காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும் மாமல்லபுரத்தில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவும், கோயம்பேட்டில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவும், தாம்பரத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவும் பயணித்தால் கோயிலை வந்தடையலாம்.... நீண்ட ஆயுள் தந்து வரம் அருளும் மேகநாதீஸ்வரரை வணங்குவோம் அருள் பெறுவோம்...


Next Story

மேலும் செய்திகள்