ஹைகோர்ட், ரிசர்வ் வங்கி மேல் பறந்த ட்ரோன் - சென்னையில் பரபரப்பு

ஹைகோர்ட், ரிசர்வ் வங்கி மேல் பறந்த ட்ரோன் - சென்னையில் பரபரப்பு

சென்னையில் உயர்நீதிமன்றம், ரிசர்வ் வங்கியை ட்ரோன் கேமரா மூலம் படம் பிடித்த கர்நாடக இளைஞரை போலீசார் கைது செய்தனர். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு மேலே ட்ரோன் கேமரா ஒன்று பறந்தது. இது தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். விசாரணையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சார்லஸ் எனும் இளைஞர் ட்ரோன் கேமராவை பறக்க விட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உறவினர் திருமணத்திற்காக பெரம்பூருக்கு ட்ரோன் கேமராவை எடுத்து வந்ததும், திருமணம் முடிந்து சென்னையில் உள்ள முக்கிய இடங்களை படம் பிடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, ட்ரோன் கேமராவையும் பறிமுதல் செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com