காவிரி ஆற்றில் கிடு கிடுவென உயர்ந்த நீர்வரத்து..கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Dharmapuri

கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. கர்நாடக அணைகளான கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திறந்துவிடப்பட்ட நீரானது தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பிலிகுண்டுலு பகுதியை வந்தடைந்தது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து, 2300 கன அடியாக உள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com