பைக்கில் அதிவேகம்.. சாலையில் திடீரென பயங்கர சத்தம் - பள்ளி மாணவருக்கு நேர்ந்த சோகம்

x

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற அரசு பள்ளி மாணவர், விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

12ஆம் வகுப்பு படித்து வரும் தஷ்ணாமூர்த்தி, தனது உறவினர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளார்.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மாணவர், தடுப்பு கட்டையில் மோதியதில், தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார்.

பள்ளி மாணவன் தஷ்ணாமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரழந்த விபத்து குறித்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்