"பெற்றாலும், தத்தெடுத்தாலும் பிள்ளைதான்.. உரிமை மாறாது" - உயர்நீதிமன்றம் கருத்து

x

தந்தையின் வேலையை தத்து பிள்ளைக்கு வழங்க மறுத்தால், குழந்தையை தத்தெடுப்பதற்கான அர்த்தமே இல்லை என்ன கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கர்நாடகா மாநிலம் பனாஹத்தியில் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் நான்காம் நிலை ஊழியராக பணியாற்றி வந்த நபர் கடந்த 2018 -ஆம் ஆண்டு இறந்து விட்டார்.

இதை தொடர்ந்து தந்தையின் வேலையை தர வேண்டும் என, வளர்ப்பு மகன் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர், இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட நபர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடகா உயர் நீதிமன்றம், ஒரு மகன் அல்லது மகள் அவர்கள் சொந்தப் பிள்ளையாக இருந்தாலும் தத்தெடுக்கப்பட்டாலும், உரிமை எப்போதும் மாறாது என தெரிவித்துள்ளது.

மேலும் சொந்த பிள்ளை, தத்தெடுக்கப்பட்ட பிள்ளை என்று வேறுபாடு காட்டினால் ஒரு குழந்தையை தத்தெடுப்பதற்கான அர்த்தமே இல்லை என கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது அரசியலமைப்பு பிரிவு 14 ஐ மீறும் செயலாக இருக்கும் என்பதால் செயற்கையாக பாரபட்சம் காட்டும் விதிகளை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்