சிக்ஸர்களை பறக்கவிட்ட ஹெட்மயர்..அஸ்வின் ஆடிய மாஸ்டர் கேமியோ - அசுர பல குஜராத்துக்கு ஆப்பு..!

x

ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் குஜராத் அணி பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மில்லர் 46 ரன்களும், சுப்மன் கில் 45 ரன்களும் எடுத்திருந்தனர். இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 19 புள்ளி 2 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. அதிரடியாக விளையாடிய கேப்டன் சஞ்சு சாம்சன், 32 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். கடைசி நேரத்தில் சிக்சர்களாக பறக்க விட்ட ஹெட்மயர் 26 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து, ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.


Next Story

மேலும் செய்திகள்