"இனி தான் உங்களுக்கு ஆப்பு" - சீனாவுக்கு பறந்த எச்சரிக்கை
"இனி தான் உங்களுக்கு ஆப்பு" - சீனாவுக்கு பறந்த எச்சரிக்கை
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 புள்ளி 8 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
2023ம் ஆண்டில் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைக்கக்கூடும் என்றும். மோசமான நிலை இனி தான் உள்ளது என்றும் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாகச் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பு ஆண்டில் உலக ஜிடிபி 3.2 சதவீதம் வளரும் என்றும் இது 2023ஆம் ஆண்டில் வளர்ச்சி 2 புள்ளி 7 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 புள்ளி 8 சதவீதமாக இருக்கும் என்றும் இரண்டாம் காலாண்டில் எதிர்பார்த்ததை காட்டிலும் வளர்ச்சி குறைவாக இருந்ததே இதற்கு காரணம் என்று சொல்லப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் மற்றும் சீனா ஆகியவை தொடர்ந்து பொருளாதார சரிவை எதிர்கொள்ளும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
