இந்தியாவின் மர்மதேசமான "மணிப்பூர்" வெளிவராத பல அதிர்ச்சி உண்மைகள் இதோ..! - மறைக்கப்பட்ட வீடியோக்கள்.. இருண்ட பக்கங்கள்..

x

நாட்டையே உலுக்கியுள்ள மணிப்பூர் சம்பவத்தில், இன்னும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வராமல் மறைக்கப்படு வதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

79 நாட்களாக தொடரும் வன்முறையால் கலவர பூமியாக காட்சியளிக்கும் மணிப்பூரில்... குகி இன பெண்களை நிர்வாணமாக சாலையில் நடக்க வைத்து, மைதேயி இன ஆண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் நாட்டையே தலைகுனிய வைத்துள்ளது.

இந்நிலையில் , ஒரு போலி செய்தியால் இந்த கொடூர செயல் நிகழ்த்தப்பட்டு இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மே மூன்றாம் தேதி மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே கலவரம் வெடித்த நிலையில்,

சமூக வலைதளங்களில் மணிப்பூரில் உள்ள சுராசந்த்பூரில் மைதேயி இன பெண்ணை குகி இன ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டதாக பொய்யான தகவல் பரவியது.

உண்மையிலேயே அந்த வீடியோவில் இருந்தது.... கடந்த நவம்பர் மாதம் டெல்லியில் பெற்றோரால் கொலை செய்யப் பட்ட ஒரு இளம் பெண்ணின் சடலம் என்பது பிறகே தெரிய வந்தது.

இந்நிலையில், சுராசந்த்பூர் சம்பவத்திற்கு பழிவாங்குவதாக கூறி, தங்களை நிர்வாணமாக நடக்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணும் தாம் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

லும், இது தொடர்பாக கடந்த மே 18ஆம் தேதியே காவல் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப் பட்டதும் தற்போது தெரிய வந்துள்ளது.

அதேபோல்... ஒரு ஆங்கில செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள மற்றொரு தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரில் மேலும் ஆறு குகி இன பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதாகவும்.... ஆனால், இதுவரை காவல் நிலையத்தில் இது தொடர்பாக எவ்வித புகார் அளிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்களின் மருத்துவ பரிசோதனையில் அவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது உறுதியாகியுள்ள போதிலும், அவர்கள் தாங்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று கூறுவதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவிர, மே நான்காம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஜூலை 12-ம் தேதியே, பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பில் புகார் அளிக்கப்பட்டும்... தேசிய மகளிர் ஆணையம் அதனை கண்டுகொள்ளவில்லை என புகார் அளித்தவர்கள் தெரிவித்ததாக 'இந்தியா டுடே' செய்தி வெளியிட்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் மாதத்தில் மட்டும் இது போல் பல புகார்கள் தங்களிடம் வந்ததாகவும்... அதனை மாநில நிர்வாகத்திடம் தாங்கள் பரிந்துரைத்ததாகவும்... இதுவரை அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா , இதற்கு விளக்கமளித்திருக் கிறார்.

மணிப்பூர் சம்பவத்தில் இன்னும் என்னென்ன உண்மைகள் புதைந்திருக்கிறது என்பது தொடர் விசாரணைக்கு பிறகே தெரியவரும்.


Next Story

மேலும் செய்திகள்