"எங்களுக்கு உதவுங்கள்" - வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆப்கானிஸ்தான் - சர்வதேச உதவியை நாடிய தலிபான்கள்

x

ஆப்கானிஸ்தானில் இந்த மாதம் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 192 பேர் பலியானதைத் தொடர்ந்து தலிபான் நிர்வாகம் சர்வதேச உதவிகளை நாடியுள்ளது. ஆயிரக்கணக்கான கால் நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தன. மேலும், 17 லட்சத்திற்கும் அதிகமான பழ மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் நாட்டில் பொருளாதார சிக்கல் தலைவிரித்தாடும் நிலையில், மக்கள் அன்றாட உணவுக்கே கஷ்டப்படும் சூழல் நிலவியுள்ளது. சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு உணவு, உடை, டெண்ட்டுகள் உள்ளிட்ட அவசர உதவிகள் தேவைப்படும் நிலையில், ஆப்கானிஸ்தானின் பேரிடர் அமைச்சகம் சர்வதேச நாடுகளின்டம் உதவிகளைக் கோரியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்