ஹலோ சார் பக்கத்துக்கு ஸ்டேட் போறீங்களா - வந்தாச்சு புதிய சேவை..அனுமதி சான்று இனி ஆன்லைன் வழியில் கட்டணம்

x

மாநிலங்களுக்கு இடையே தற்காலிக போக்குவரத்து அனுமதி சான்று பெறு ஆன்லைன் வழி கட்டண சேவை தொடங்கப்பட்டுள்ளது.

மாநில எல்லைகளில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள 22 சோதனைச்சாவடிகளில் வெளிமாநிலங்களுக்கு செல்வதற்கு தற்காலிக அனுமதி சான்று அளிக்கப்படுகிறது.

இந்த சான்று பெற கூடுதல் கட்டணம் வசூலிப்பதோடு, லஞ்சம் கேட்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதை தொடர்ந்து, முறைகேடுகள், ஊழல் புகார்களை தவிர்க்க, 22 சோதனை சாவடிகளில் ஆன்லைன் வழி கட்டண சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பரிவான் இணைய தளத்திற்கு சென்று தமிழகத்தை தேர்ந்தெடுத்து, அதில் கேட்கும் தகவல்களை நிரப்பி, ஆன்லைன் வழியில் கட்டணம் செலுத்தி தற்காலிக போக்குவரத்து சான்றிதழை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தியதற்கான ரசீது கியூஆர் குறியீட்டுடன் வரும் என்பதால், முறைகேடுகளை தவிர்க்க முடியும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்