"ஹலோ மிஸ்டர் 360 டிகிரி.." சூர்யகுமாரை புகழ்ந்து தள்ளிய ABD

x

இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 360 டிகிரி வீரர் என்ற நிலையை அடைந்து விட்டதாக, முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 25 பந்துகளில் 61 ரன்கள் விளாசிய சூர்யகுமார், கிரிக்கெட்டை பொறுத்தவரை டி வில்லியர்ஸ் மட்டுமே 360 டிகிரி வீரர் எனவும், அவரை போல தான் விளையாட முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

இதை குறிப்பிட்டு டுவீட் செய்துள்ள டி வில்லியர்ஸ், 360 டிகிரி வீரர் என்ற நிலையை சூர்யகுமார் அடைந்து விட்டதாகவும், அதையும் விட சிறப்பாக விளையாடுவதாகவும் பாராட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்