ஹலோ ஏலியன்ஸா..?மறைந்திருக்க வாய்ப்பு.. ஏலியன்களை கண்டுபிடிக்க புதிய வழி - பகீர் எச்சரிக்கை விடும் விஞ்ஞானி

x

ஆச்சரியமிக்க மர்மங்களின் முதன்மையான பட்டியலில் இருப்பது ஏலியன்ஸ் தான்.... இதுவரை பல ஆய்வுகளும், வதந்திகளும் அதைப்பற்றி வலம்வரும் நிலையில், அதை உறுதிப்படுத்த ஒரு வழியிருப்பதாக கூறியுள்ளார் அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு மாணவர்.... அது பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.....

கற்பனைகளை கதையாக காட்டி அதை வைத்து கல்லா கட்டுவதில் ஹாலிவுட் சினிமாக்காரர்கள் கைதேர்ந்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

முதற்கட்ட ஆய்விலும், நாவல்களில் வந்த கதைகளையும் வைத்து ஏலியன் என்ற வேற்றுகிரகவாசிகள் இருப்பதாக திரைப்படங்கள் எடுத்தனர். நாட்கள் செல்ல செல்ல அதற்கான ஆய்வுகளும் கற்பனைகளும் வலுப்பட்டன.

தொடர்ச்சியாக அமெரிக்காவில் ஏரியா 51 என்ற ஏலியன் ஆய்வு தளம் இருப்பதாக கூறப்பட்டது....

எங்காவது ஏலியன்கள் சிக்கிவிடாதா என பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் வலைவீசி தேடிக்கொண்டிருக்க, அதற்கு சாத்தியமான வழி ஒன்று இருப்பதகா கூறியுள்ளார் அமெரிக்காவில் உள்ள கர்னெல் பல்கலைகழகத்தை சேர்ந்த பட்டதாரி மாணவர் அக்‌ஷய் சுரேஷ்.

ஏலியன்களை கண்டறிய "சமிஞைகள்"தான் முதல் வழி.... அந்த சமிஞைகளை கொண்டு ஏலியன்களை அறியலாம் என கூறியுள்ளார்....

வானில் உள்ள பால்வெளி அண்டத்தில் பல நட்சத்திர குடும்பங்கள் உள்ளன... அந்த நட்சத்திர குடும்பங்களில் அதிக நியூட்ரான்களை, அலையாக வெளியேற்றும் சக்தி கொண்ட நட்சத்திரங்களும் உள்ளன.

அவை சக்திவாய்ந்த கதிர்களை வெளியிட்ட வண்ணமே இருக்கும், நடத்திர கூட்டத்தின் நடுவில், அலைகள் வெளிவருவதாக கண்டறிந்துள்ளார் ஆய்வு மாணவர்....

அந்த அலைகள் எப்எம் அலைகளை விட 10 மடங்கு சிறியவை என்றும், நெடுந்தூரம் பயணிக்கும் அந்த அலைகள் அதிக காந்த தன்மை கொண்டதாக இருக்கிறது என்றும் கண்டறிந்துள்ளார்.

ஒரு வேலை பால் வெளி அண்டத்தில் ஏலியன்கள் இருந்தால், அவை மற்ற கிரகத்திற்கு செய்தி சொல்ல முயற்சி செய்யும். அப்போது இது போன்ற அலைகளை வெளியிடும்.

இந்த அலைகளை கொண்டு ஆய்வு செய்வதின் மூலம் ஏலியன்களை பால்வெளி அண்டத்தில் உள்ளதா என்பதை ஆய்வு செய்யலாம் என்றும், இதை உள்வாங்க ஒரு கருவியை கண்டறிந்திருப்பதாகவும் கூறுகின்றார்.

இதன் மூலம் ஏலியன்ஸ்களை தொடர்பு கொள்ள முடியும் என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அண்டவெளியை பற்றி பல உண்மைகளை வெளி உலகிற்கு சொன்ன விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், ஏலியன்களை பற்றி எச்சரிக்கை செய்திருக்கிறார்...!

"பால்வெளி அண்டத்தின் ஏதாவது ஒரு மூலையில், நம்மைவிட அறிவில் முதிற்சி கொண்ட, பலமான உயிரினங்கள் இருக்கலாம். அவை நம்மை அழிக்க முயற்சி செய்ய வாய்ப்பிருக்கிறது என எச்சரித்து, அதை தொடர்பு கொள்ளாமல் இருப்பதே மனிதர்களுக்கு நல்லது எனவும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்