"வருத்தமாக இருந்தாலும் பெருமையாக இருக்கு" - உயிரிழந்த ராணுவ வீரர் மேஜரின் தந்தை உருக்கம் | Jayanth

x
  • அருணாசலபிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த லெப்டினன்ட் கர்னல் ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்தின் உடல்களுக்கு, திசாப்பூர் ராணுவ மையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
  • பின்பு லெப்டினன்ட் கர்னல் ரெட்டியின் உடல் ஹைதராபாத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மேஜர் ஜெயந்தின் உடல் விமானப்படை விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்டது.
  • மதுரை விமான நிலையத்தில் ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் மற்றும் காவல்துறை அதிகாரிகள், மேஜர் ஜெயந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
  • இதைத்தொடர்ந்து, இன்று காலை மதுரையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம், பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்திற்கு மேஜர் ஜெயந்தின் உடல் கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்