சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள் : ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

x

சென்னை அடுத்த பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது

பொங்கல் பண்டிகையை ஒட்டி, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக, சென்னையில் இருந்து மூன்று நாட்களுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால், பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்