வானதி சீனிவாசனுக்கு எதிராக மநீம ஆர்ப்பாட்டம் - "இது தொடக்கம் மட்டுமே.." - சினேகன், மக்கள் நீதி மய்யம்

x

கோவையில் பாஜக எம்ல்ஏ வானதி சீனிவாசன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி, அவருக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உக்கடத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளரிடம் பேசிய கவிஞர் சிநேகன், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது தொதகுதி மக்களுக்கு அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டுள்ளார் என்று குற்றம் சாட்டினார். தாங்கள் முன்வைத்த கோரிக்கைகளை தற்போதைய அரசு படிப்படியாக நிறைவேற்றி வருவதால், அரசை பாராட்டுவதாக கூறியுள்ள அவர், கோரிக்கைகளை நிறைவேற்றும் எந்த அரசையும் பாராட்டுவோம் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்