எப்பப்போ எங்கெங்கே மழை..? - தமிழக்தில் 2 இடங்கள் டார்கெட்

x
  • அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
  • நாளை நீலகிரி, கோவை மலைப்பகுதிகளில்
  • ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
  • அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடலிலும்,
  • ஆந்திர கடலோரம், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல், இலங்கை கடலோரம், அதை ஒட்டிய தெற்கு வங்கக் கடலிலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
  • மேலும், வடக்கு கேரள கடலோரம், அதை ஒட்டிய லட்சத்தீவு, கர்நாடக கடலோரத்தில் சூறாவளி வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்